வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான இரண்டாவது சீசன் இன்று முதல் (வெள்ளிக் கிழமை) தொடங்கப்படவுள்ளது. இன்று முதல் தொடங்கி நடைபெறும் இந்த மகளிர்

TATAWPL ShahrukhKhan

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான இரண்டாவது சீசன் இன்று முதல் (வெள்ளிக் கிழமை) தொடங்கப்படவுள்ளது. இன்று முதல் தொடங்கி நடைபெறும் இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் வருகின்ற மார்ச் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  முதல் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

unknown node

இந்நிலையில் பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கான் இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என கூறப்பட்டது. இந்நிலையில், போட்டி இன்று நடைபெறவிருக்கும் நிலையில், பிரமாண்டமாக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடக்க விழா நடக்கிறது. டைகர் ஷெராஃப், ஷாஹித் கபூர், வருண் தவான், கார்த்திக் ஆர்யன் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோரும் விழாவில் பங்கேற்கின்றனர்.

unknown node

விழாவில் ​​பின்னணி நடனக் கலைஞர்களுடன் ஷாருக் தனது நடிப்பை ஒத்திகை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.மற்றொரு வீடியோவில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் வீராங்கனைகளுடன் ஷாருக்கான் உரையாடுகிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணியின் கேப்டன் மெக்லானிங் ஷாருக்கானை பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.

unknown node

பின் எனக்கு உங்களுடைய சின்னமான அந்த ஸ்டைலான போஸை எனக்கும் சொல்லி கொடுங்கள் என்று கூறினார். அதற்கு ஷாருக்கானும் தனது கையை அசைத்து கொண்டு சொல்லி கொடுத்தார். அவர் சொல்லி கொடுத்ததை போலவே,  மெக்லானிங் செய்கை காட்டி செய்துகாட்டினார். பிறகு அன்புடன் ஷாருக்கான் அவரை கட்டியணைத்து கொண்டார்.  இந்தவீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

read more –ராயன் படம் இப்படித்தான் இருக்கும் ! மனம் திறந்த காளிதாஸ் ஜெயராம்!

மேலும், ஷாருக்கான் கடைசியாக டன்கி திரைப்படத்தில்  நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று  இருந்தது . இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக பதான் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.