இந்தியா தோல்வி! முதன் முதலாக குழந்தைகள் முன்பு கதறி அழுத செல்வராகவன்!

உலகக்கோப்பை கிரிக்கெட் 2023-யின் இறுதிப்போட்டி நேற்று குஜராத், அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும், மோதியது. இதில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்தியா வெற்றிபெறும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இந்திய தோல்வியடைந்துள்ளதால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். கிரிக்கெட் வீரர் பிரபலங்கள் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து பலரும் கூறி வருகிறார்கள். அதைப்போல சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வருத்தங்களை பற்றி பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில், பிரபல இயக்குனரான செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கங்களில் சோகத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை.பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது” என பதிவிட்டுள்ளார்.
கதாநாயகியாக நடிக்க ஆசை இருக்கு! வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும்…சஞ்சனா நடராஜன் எமோஷனல்!
முதன் முறையாக தனது குழந்தைகளின் முன்பு செல்வராகவன் கண்கலங்கியதாக கூறியது தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 240 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 241-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து வெற்றிபெற்று கோப்பையை வென்றது.
மேலும், செல்வராகவன் தற்போது நானே வருவேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக 7 ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025