கொரோனாவுக்கு சிறப்பு நிதி வழங்க திரைபிரபலங்கள் உதவ வேண்டும் – இயக்குனர் பாரதி ராஜா

முதலில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ், தொடர்ந்து மற்ற நாடுகளையும் பாதித்துள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் இந்தியாவையும் தாக்கியுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த

முதலில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ், தொடர்ந்து மற்ற நாடுகளையும் பாதித்துள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் இந்தியாவையும் தாக்கியுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா  தடுப்பு பணிக்காக மக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் பாரதி ராஜா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் போலிஸாருக்கு முகக்கவசங்கள், கையுறை மற்றும் கை சுத்திகரிப்பான்களை வழங்கினார். மேலும், கொரோனாவுக்கு சிறப்பு நிதி வழங்கி திரைபிரபலங்கள் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.