மிரட்டும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் ட்ரைலர்.!

Lal SalaamTrailer

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ட்ரைலரை 7 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தில் கபில்தேவ், நிரோஷா, செந்தில், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா, டைகர் கார்டன் தங்கதுரை, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான டீசர் சமீபத்தில் வெளியாகி அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்ற நிலையில்,தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது.

டீசரை போலவே, ட்ரைலரும் சும்மா மிரட்டலாக அமைந்திக்கிறது. முன்னதாக, காரணம் கூறாமல் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது. அதன்படி, தற்பொழுது பிப்ரவரி 9-ஆம் தேதி வரும் வெள்ளக்கிளமை படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்