தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் காமெடி நடிகராக சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சதீஷ். ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் ஹீரோவாக நாய்சேகர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக “சட்டம் என் கையில்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சி இயக்குகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
unknown nodeஇந்த போஸ்டரை பார்த்த அணைத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் சதிஷிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில், போஸ்டரில் இதுவரை இல்லாத அளவிற்கு சதீஷ் மிகவும் மிரட்டலான லுக்கில் இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சதீஸ் தற்போது அதிரடி ஆக்சன் ஹீரோவாக களமிறங்குகிறார்.