பிரதமர் மோடியின் வாழ்கை வரலாற்று படத்தில் நானா? விளக்கம் கொடுத்த சத்யராஜ்!

சத்யராஜ் : பிரதமர் மோடியின் வாழ்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக பரவும் தகவலுக்கு நடிகர் சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும், இந்த திரைப்படத்தில் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் சத்தியராஜ் நடிக்கவுள்ளதாகவும் பிரமாண்டமாக எல்லா மொழிகளிலும் பேசப்படும் வகையில், பிரதமர் மோடி வாழ்கை வரலாற்று படத்தை பெரிய நிறுவனம் எடுக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியாகி மிகவும் வைரலாகி கொண்டு இருந்தது.
இந்த தகவல் உண்மையா இல்லையா? படத்தில் சத்யராஜ் மோடி கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வியை எழுப்பி வந்த நிலையில், தற்போது சத்யராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அவர் பேசியதாவது ” பிரதமர் மோடியின் வாழ்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக வெளியான செய்தியை நான் பார்த்தேன்.
அந்த செய்தி எனக்கே ஒரு செய்தியாகத்தான் தெரியும். பிரதமர் மோடி உடைய வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. மக்கள் சமூக ஊடகங்களில் தற்செயலான செய்திகளைப் பரப்புகிறார்கள். நான் மோடியாக நடிப்பதாக பரவும் தகவல் வதந்தி. மோடி பயோபிக் படத்துக்காக யாராவது என்னை அணுகினால் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் யோசிக்கலாம்.
இதுபோன்ற பல வதந்திகள் ஏற்கனவே பரவி வருவதாகவும், தவறான செய்திகளை தயவுசெய்து பரப்ப வேண்டாம். மக்கள் யாரும் இதுபோன்ற வதந்திகளை தயவுசெய்து நம்பவும் வேண்டாம். ” என கூறி நடிகர் சத்யராஜ் மோடி பயோபிக் படத்தில் தான் நடிப்பதாக வெளியான வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025