இயக்குநர் ராஜிவ் மேனன் இயக்கத்தில்,இசைமைப்பாளரும்,நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியாக இருக்கும் படம் சர்வம் தாள மயம்.படம் முழுக்க இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதாக தெரிகிறது.மேலும் படம் மியூசிக்கல் டிராமா படமாகிய இந்த படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இயக்குநர் ராஜிவ் மேனனின் மனைவி லதா மேனன் தான் படத்தைத் தயாரிக்கிறார்.மேலும் படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்
இந்நிலையில் படத்தின் ‘சர்வம் தாள மயம்’ என்கின்ற சிங்கிள் டிராக்கின் LYRICAL வீடியோ இன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. படத்திற்கு மதன் கார்க்கி பாடல்வரிகள் எழுதி உள்ளார் மற்றும் ஹரிசரண் மற்றும் அர்ஜுன் சாண்டி இருவரும் இந்த பாடலைப் பாடியுள்ளனர். படம் வரும் டிசம்பர் 28-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node