வரலட்சுமி கல்யாணத்துக்கு 10 பைசா செலவு பண்ணாத சரத்குமார்? வெளிவந்த சீக்ரெட்!

sarathkumar

வரலட்சுமி : நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை நாளை திருமணம் செய்ய இருக்கிறார். நிக்கோலாய் சச்தேவ் மும்பையில் விலையுயர்ந்த ஓவியங்களை விற்பனை செய்யும் ஆர்ட் கேலரியை நடத்தி வரும் ஒருவர். இவர்களுடைய இரு வீட்டாரும் கலந்து பேசி இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க இருக்கிறார்கள்.

ஏற்கனவே, இந்த நல்ல விஷயத்தை ரசிகர்களுக்காக வரலட்சுமி அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்தார். இதனையடுத்து, திருமணம் நாளை நடைபெறுவதை ஒட்டி திருமண விழா கோலாகலமாக இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கியது. அதன்படி, கடந்த ஜூன் 30 ஆம் தேதி வரலட்சுமிக்கு மெஹந்தி விழா நடைபெற்றது.

அதற்கு அடுத்ததாக, ஜூலை 1 ஆம் தேதி, நடிகை மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு சங்கீத விழாவை நடத்தினர். இதில் குடும்பமே ஒன்றாக இணைந்து நடனமும் ஆடினார்கள். இதற்கான வீடியோக்களும் கூட சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. நாளை இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமான செலவில் தாய்லாந்தில் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது சொந்த மகள் வரலட்சுமி திருமணத்திற்கு சரத்குமார் 10 பைசா கூட செலவு செய்யவில்லை என நடிகர் பயில்வான் ரங்கானதான் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணம் பிரமாண்டமாக தாய்லாந்தில் நடக்கவுள்ளது. அங்கு நடக்கவுள்ள திருமணத்திற்கு இங்கு பலரையும் அவருடைய குடும்பத்தினர் அழைத்து வருகிறார்கள்.

தன்னுடைய திருமணத்தை அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக வரலட்சுமி வருங்கால கணவர் திருமண ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகிறார்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் திருமணத்தின் முக்கிய செலவுகள்  அனைத்துமே அவருடைய மனமகன்  ஏற்றுக் கொண்டிருக்கிறாராம். சரத்குமார் 10 பைசா கூட செலவு செய்யவில்லை எனவும் ‘பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay