நடிகர் அஜித் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கிறார். அஜித்தின் 61வது படம் என்பதால், இந்த படத்திற்கு தற்காலிகமாக AK61 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், படத்தில் தான் நடிப்பதை சமுத்திரக்கனியே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார்.
unknown nodeஇதனை தொடர்ந்து சமுத்திரக்கனி படத்தில் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழும்பியது. அந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் அஜித்திற்கு டஃப் கொடுக்கும் வில்லனாக சமுத்திரக்கனி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeசமுத்திரக்கனி தெலுங்கில் “ஆலவைகுந்தபுரம்லு” படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். அந்த வெற்றிக்குப்பின் தெலுங்கில் சில படங்களில் வில்லனாகவும் நடிக்க தொடங்கிவிட்டார். அதைபோல் தமிழில், தற்போது அஜித்திற்கு வில்லனாக முதன் முறையாக நடிப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.