லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை பார்த்து விட்டு சச்சின் டெண்டுல்கர் மாஸ்ஸான டுவிட் ஒன்னற பதிவிட்டுள்ளார்.
ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது கிரிக்கெட் என்றாலே முதலில் நினைவில் வருவது சச்சின் டெண்டுல்கர். ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் இவர் பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் குறித்து பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிரண்ஷிப் படத்தை பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது சச்சின் அவர்களின் இந்த டூவிட் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown node