இந்தியன் 2 வசூலை மிஞ்சியதா ராயன்? முதல் நாள் வசூல் விவரம் இதோ!!

indian 2 vs raayan

ராயன் : இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படங்கள் தனுஷ் நடித்த ராயன் மற்றும் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தினை கூறலாம். இதில் இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் 50-வது படமான ராயன் படம் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இருந்த காரணத்தால் படத்திற்கு மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று வருகிறார்கள்.

இந்நிலையில், ராயன் படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தின் வசூலை முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது அதற்கான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ராயன் படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 12 கோடி வசூல் செய்து இதுவரை தனுஷிற்கு முதல் நாளில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது.

அதே சமயம், இது இந்தியன் படத்தின் முதல் நாள் தமிழக வசூலை முறியடிக்கவும் தவறியுள்ளது. இந்தியன் 2 படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 16 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியன் 2 தமிழகத்தில் மொத்தமாகவே 40 கோடிகளுக்கு மேல் தான் வசூல் செய்திருந்தது. ராயன் படம் நல்ல வரவேற்பு பெற்று வருவதன் காரணமாக அந்த வசூலை முறியடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ராயன் படத்தினை தனுஷே இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  செல்வராகவன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா  உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்