நான் கைது செய்யப்பட்டதாக கூறியது வதந்தி – பூனம் பாண்டே.!

நான் நேற்றைய தினம் மும்பையில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றுபூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நான் நேற்றைய தினம் மும்பையில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றுபூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பூனம் பாண்டே, ஒரு மாடலான இவர் தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். வழக்கமாக இவர் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்த நிலையில்  நேற்று பூனம் பாண்டே தனது காதலனுடன் BMW காரிலில் வெளியில் சென்று,  ஊரடங்கு நேரத்தில் அரசு ஆணைகளை மதிக்காமல் வெளியே சுற்றியதற்காகவும், நோய் தொற்று பரப்ப காரணமாக இருந்ததற்காகவும் மும்பையில் உள்ள மரைன் டைரவ் காவல் துறையினர் பூனம் பாண்டேவை கைது செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியதை ஏற்கனவே பார்த்தோம் . அது மட்டுமின்றி, அவரது காரையும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இது குறித்து பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் நேற்றைய தினம் மும்பையில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றும், நான் நேற்று மட்டுமே மராத்தான் உட்பட 3 படங்களை வீட்டில் இருந்து பார்த்ததாகவும், அவை அனைத்தும் மிக நன்றாக இருந்தது என்றும், என்னை யாரும் கைது செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இதிலிருந்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறியது முற்றிலும் பொய் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

unknown node