விக்ரம் படத்திலிருந்து வெளியேறிய ராக்ஸ்டார்... காரணம் இதுதான்...!!

The reason behind Anirudh's departure from the Sion 60 film has now been revealed

சியான் 60 படத்தில் இருந்து அனிருத் விலகிய காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வரும் திரைப்படம் சியான் 60. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்தில் நடிகரை வாணி போஜன், சிம்ரன், பாபிசிம்ஹா, முத்துக்குமார், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 10 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கு முதன் முதலாக இசையமை ஒப்பந்தம் செய்யப்பட்டது இசையமைப்பாளர் அனிருத் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதன் பிறகு தான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் அனிருத் விலகியதற்கான காரணம் தற்போது கிடைத்துள்ளது. ஆம் , இசையமைப்பாளர் அனிருத் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருவதால் சியான் 60 படத்திற்கான இசையை குறித்த நேரத்தில் கொடுக்கமுடியாது என்பதால் படத்தை விட்டு விலகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.