விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்..!!

The new film, directed by Balaji K. Kumar, is said to star actor Vijay Antony and actress Rithika Singh

இயக்குனர் பாலாஜி கே.குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகை ரித்திகா சிங்  நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் ஆண்டனி தற்போது காக்கி, கோடியில் ஒருவன் , அக்னி சிறகுகள், மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கோடியில் ஒருவன் திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் ஆண்டனி ஓடிடி தளத்திற்காக ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த படத்தை விடியும் முன் படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி கே.குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்திற்கான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.