'ரெட்ரோ' ரிலீஸ்: தாரை தப்பட்டை கிழிய பால் அபிஷேகம்.., ரசிகர்கள் கொண்டாட்டம்.!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ வெளியானதை ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என திரையரங்கை அலற வைத்து வருகின்றனர்.

Retro FDFS

சென்னை :நடிகர்சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘ ரெட்ரோ ‘ படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், காதல், ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் வெளியீட்டைக் கொண்டாட சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளில்  ஆட்டம் பாட்டத்துடன் சூர்யா ரசிகைகள் கொண்டாடினர்.மறுபுறம் படத்தை ரசிக்கும் ரசிகர்கள், சூர்யாவின் ‘ரெட்ரோ’ பற்றிய தங்கள் விமர்சனத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

படம் பயங்கர ஸ்டைலாக இருப்பதாகவும், சூர்யா அசத்தலாக நடித்திருப்பதாகவும் சிலாகித்து வருகின்றனர்.  மேலும் இது கேங்ஸ்டர் படத்திற்கு ஒரு சிறந்த தொடக்கம் என்றும், படம் நிச்சயம் ஒரு ‘Cult Classic’ தான் என குறிப்பிடுகின்றனர்.

unknown node

சென்னை உள்ளிட்ட இடங்களில் ரசிகர்கள் மேளதாளங்களுடன் உற்சாகமாக கொண்டாடினர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள், குறிப்பாக “கனிமா” பாடல், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

'ரெட்ரோ' ரிலீஸ்: தாரை தப்பட்டை கிழிய பால் அபிஷேகம்.., ரசிகர்கள் கொண்டாட்டம்.!