நாளை வெளியாகிறது? வலிமை ட்ரைலர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Information from credible cinema circles that the trailer of the movie valimai will be released tomorrow.

வலிமை படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்களிலிருந்து தகவல்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி (அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை) திரைக்கு வர இருக்கிறது. H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பாப்பு நிலவி வருகிறது.

இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே என்றே கூறலாம்.

இந்த படத்தின் டீசர், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நிலையில் விரைவில் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி சற்று முன் வெளியான தகவலின்படி நாளை ‘வலிமை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்களிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் டீஸர் மற்றும் பைக் சேஸிங் மேக்கிங் காட்சிகள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய வியப்பில் ஆழ்ந்திருந்த நிலையில், நாளை வலிமை படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. ஆனால், டிரைலர் குறித்து தயாரிப்பு தரப்பிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

சினிமா இண்டஸ்ட்ரி டிராக்கர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை ட்ரைலர் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் அஜித்குமாரின் வலிமை டிரைலர் நாளை வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிர்கள் உற்சாகத்தில் ட்ரைலரை பார்க்க காத்திருக்கின்றனர்.

எனவே, வலிமை டிரைலர் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக சோனி மியூசிக் சவுத் தனது ட்விட்டர் பக்கத்தில் கம்மிங் சூன் என்றும் பதிவிட்டுள்ளது. மேலும், வலிமை படத்தின் டிரைலரை சிலர் பார்த்து விட்டதாகவும் டிரைலர் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மொத்தமாக 3 நிமிடங்கள் பவர்ஃபுல் ஸ்டன்ட் காட்சிகள் நிறைந்த டிரைலராக உள்ளதாகவும் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown nodeunknown node
நாளை வெளியாகிறது? வலிமை ட்ரைலர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!