இசைப்புயல் இசையை அடுத்து யுவனின் இசையை கேட்க ரெடியா.? சந்தானம் ரசிகர்களுக்கு 'டிக்கிலோனா' அப்டேட்.!

The production company has announced that the update of Santhanam's Diclona movie will be released today at 5 p.m.

சந்தானத்தின் டிக்கிலோனா படத்தின் அப்டேட்டை இன்று 5 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா .கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தை பலூன் பட இயக்குநரான சினிஷ் தயாரிக்க கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் .

ரிலீஸ்க்கு தயாராகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கிறார் . மேலும் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அனகா, ஷிரின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.நேற்றைய தினம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அயலான் படத்திலிருந்து வெளியான பாடலை தொடர்ந்து இன்று யுவனின் இசையை கேட்கலாமா என்றும் ,அதிலும் யுவன் மற்றும் இளையராஜா இசையை கேட்கலாமா என்றும் குறிப்பிட்டு படத்தின் அப்டேட் இன்று 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node