ராயன் படத்தின் செட்டுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா?

ராயன் : நடிகர் தனுஷ் தன்னுடைய 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் அவருடன்

raayan dhanush

ராயன் :நடிகர் தனுஷ் தன்னுடைய 50-வது திரைப்படமான ‘ராயன்’ படத்தை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் அவருடன்  துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜீலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.ஜே. சூர்யா வியப்பான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அது என்னவென்றால், ராயன் படத்தின் செட் அமைக்கப்பட்ட விலையை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ராயன் படத்தின் ட்ரைலரில் வரும் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். அது எல்லாமே மிகப்பெரிய செட். இந்த செட்டை வடிவமைப்பாளருடன் இணைந்து தனுஷ் தான் வடிவைமைத்தார். கிட்டத்தட்ட 30 கோடி மட்டும் இதற்கு செலவு ஆனது” என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எம்மாடி படத்தின் செட்டுக்கு இத்தனை கோடிகளா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ராயன் படத்தின் செட்டுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா?