‘Forbes 30 Under 30 2024’ இந்தியா பட்டியலில், நடிகை ரஷ்மிகா 27ஆவது இடத்தை பிடித்துள்ளார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் ‘Forbes’ இதழ் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான வெளியீட்டில் 30 வயதிற்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் மொத்தம் 19 பிரிவுகள் உள்ளன. இந்த ஆண்டு, பாலிவுட்டைச் சேர்ந்த மூன்று நடிகைகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
View this post on Instagram
அதில், பொழுதுபோக்கு துறையில் தென்னிந்திய நடிகையான ராஷ்மிகாவும் இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், ‘ஃபோர்ப்ஸ் இந்தியா 30 அண்டர் 30’ பட்டியலில் இடம் பெற்ற நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எல்லார் முன்னாடியும் ரசிகரை அறைந்த அஜித் குமார்! காரணம் என்ன தெரியுமா?
இது பற்றி அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன், இப்படித்தான் உயர வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். ரஷ்மிகாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ள ஃபோர்ப்ஸ் இந்தியா இதழின் அட்டைப் புகைப்படத்தையும் அத்துடன் இணைத்து பதிவு செய்துள்ளார்.
unknown nodevijay devarakonda insta story [Image source :@Vijay Deverakonda]இதற்கிடையில், நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் அடிக்கடி பரவி வருகிறது. ஆனால், இருவருமே பேட்டிகளில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் வதந்திகள் எதையும் நம்பவே வேண்டாம் என்று தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தற்பொழுது ராஷ்மிகாவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதை வைத்து நெட்டிசன்கள் வதந்தி காதலன் என்று விஜய் தேவரகொண்டாவை அழைத்து வருகிறார்கள்.
