ரஷ்மிகா – விஜய்யின் தீரா காதல் வதந்தி.! யாருடையது இந்த பிங் கலர் குல்லா?

vijay devarakonda - Rashmika Mandana

Rashmika Mandhana: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் காதல் தொடர்பான வதந்திகள் எப்போதும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.  இருப்பினும், இருவரும் டேட்டிங் செய்வதாக பரவி வரும் செய்திகளை தொடர்ந்து மறுத்து வருகிறார்.

READ MORE – இப்போ டைம் இல்ல! தனுஷுக்கு அல்வா கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர்!

முன்னதாக, பிப்ரவரி மாதம் இருவரும் நிச்சயதார்த்தம் செய்யப்படுவதாக வதந்திகள் பரவியது. தற்போது மற்றொரு வதந்தி பரவியுள்ளது, சமீபத்தில் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, ‘RWDY’ என்ற பிராண்டிற்கு ப்ரோமோஷன் செய்திருந்தார். அந்த வீடியோவில், விஜய் தேவரகொண்டா தலையில் ரோஸ் கலர் குல்லா ஒன்றை அணிந்திருப்பார்.

READ MORE – Thalapathy 69 : அண்ணா நம்ம படத்துல ஷாருக்கான்…விஜய்க்கு தூண்டில் போடும் அட்லீ?

தற்பொழுது, அதே மாதிரி கடந்த மகளிர் தினதன்று நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட புகைப்படத்தில், தலையில் ரோஸ் கலர் குல்லாவை அணிந்திருப்பார். இதனை கவனித்த நெட்டிசன்கள் அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். ஒரு வேலை இது விஜய் தேவரகொண்டா உடையாதா? இல்லையென்றால் ராஷ்மிகா மந்தனா உடையதா என்று தெரியவில்லை என கிளப்பி விடுகிறார்கள் நெட்டிசன்கள்.

READ MORE – 2 லட்சத்தை அசால்ட்டாக தொலைத்த தயாரிப்பாளர்! விஜயகாந்த் செய்த செயல்? ப்பா என்ன மனுஷன்யா!

இதற்கிடையில், ரஷ்மிகா மந்தனாவின் ரசிகர் குழு சமீபததில் நடிகரின் புகைப்படத்தை பதிவிட்டு, “ரஷ்மிகா மந்தனாவின் கணவராக மாறுவதற்கு என்ன குணங்கள் இருக்க வேண்டும்? அவர் இந்தியாவின் நேஷனல் க்ரஷ், அவரது கணவர் சிறப்பு வாய்ந்தவராக இருக்க வேண்டும். அவங்க கணவர் ‘vd’ மாதிரி இருக்காங்க என்று பதிவிட, அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “அது மிகவும் உண்மை” என்று கருத்து தெரிவித்தார். இதுவும் அவரது காதல் வதந்தியை தூண்டியது. அதற்கு காரணம் விஜய் தேவரகொண்டா ஆங்கிலத்தில் குறுகியபடி ‘vd’ என்று அழைப்பார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்