அடல்ட் நடிகர் ஜானி சின்ஸ் உடன் ரன்வீர் சிங்.! வைரலாகும் விளம்பர வீடியோ...

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் நடித்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள உடலுறவு மருந்துகள் குறித்து விளம்பரம் வீடியோ

Ranveer Singh - Johnny Sins Ad

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் நடித்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள உடலுறவு மருந்துகள் குறித்து விளம்பரம் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் அந்த விளம்பர வீடியோவில் உண்மையிலேயே இது ஜானி சின்ஸ் தானா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். உடலுறவு குறித்த மருந்து மற்றும் மாத்திரைகளை விளம்பரம் செய்யும் வகையில், போல்ட் கேர் என்ற நிறுவனத்திற்கு இந்தி சீரியல் பானையில் இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும்  ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் உடன் ஆண்களுக்கான ஆரோக்கிய சார்ந்த போல்ட் கேர் என்ற பிராண்ட் விளம்பரத்திற்காக இருவரும் இணைந்து நடித்துள்ளனர். தன்மய் பட் மற்றும் தேவய்யா போபண்ணா இணைந்து எழுதிய இந்த விளம்பரத்தை ஐயப்பா கேஎம் இயக்கியுள்ளார்.

இணையத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், ஜானி சின்ஸுக்கு உடலுறவு சார்ந்த பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு அவரது மனைவி சண்டையிடுவது போலவும் காட்சிகள் அமைந்துள்ளது. பின்னர், என்ன பிரச்சனை என்று ரன்வீர் சிங் கேட்க, அதற்கு ஜானி சின்ஸ் டபுள் மீனிங்கில் பதில் சொல்ல, ஜானி சீன்ஸ் மனைவியின் மாமியார் அடிக்க, பின்னர் மாடியில் இருந்து விழுகிறார்.

அடேங்கப்பா! அதர்வா தம்பி ஹீரோவாக நடிக்கும் படத்தின் பட்ஜெட் இவ்வளவா?

இதனை அடுத்து ரன்வீர் சிங் ஜானி சின்ஸுக்கு “போல்ட் கேர்” மாத்திரையை தூக்கி போட, தன்னை எடுத்துக்கொண்டு மனைவியை காப்பாற்றுவது போல டபுள் மீனிங் கன்டென்ட் போல விளம்பர வீடியோ அமைந்துள்ளது.

unknown node

இதுபோல் விளம்பரங்களில் நடிப்பது பாலிவுட் பிரபலங்களுக்கு இது புதியது அல்ல. இதற்கு முன்னதாக, நடிகர் ரன்வீர் சிங் நடத்திய நிர்வாண போட்டோ ஷூட்டிற்கு பெரிய சர்ச்சையே கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.