கோலாகலமாக நடைபெற்ற நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் வீடியோ வெளியீடு.!

ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானி திருமணத்தின் முழு வீடியோ வெளியாகியுள்ளது.

Rakul Preet Singh Wedding Video

ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானி திருமணத்தின் முழு வீடியோ வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியின் திருமணம் கோவாவில் கடந்த 21ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. தற்போது இவர்கள் தங்கள் திருமண வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

READ MORE –பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ரகுல் ப்ரீத் சிங் திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்!

ரகுல் மற்றும் ஜாக்கி பக்னானியின் மெஹந்தி, ஹல்தி மற்றும் திருமண கொண்டாட்டங்களை இந்த வீடியோவில் காணலாம். இந்த திருமணத்திற்காக வருண் தவான் முதல் ஷில்பா ஷெட்டி, அக்‌ஷய் குமார் என பல பாலிவுட் நடிகர்கள் கோவாவில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.

unknown node

இதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடியும் சிறப்பு கடிதம் மூலம் ராகுல் மற்றும் ஜாக்கி இருவருக்கும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் தான் காதலிப்பதை கடந்த 2021 -ஆம் ஆண்டு அக்டோபரில் அறிவித்தார்.

READ MORE –காதலரை கரம்பிடித்தார் ரகுல் ப்ரீத் சிங்…வெளியானது திருமணப் புகைப்படங்கள்.!

அதன்பிறகு காதலனுடன் சுற்றுலா சென்றுகொண்டு வந்த இவர் சினிமா கேரியர் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக, 4 வருடங்கள் டேட்டிங் செய்துவிட்டு தன் காதலனை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் செட்டில் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.