#ReleasePerarivalan: ஒன்று திரண்ட திரையுலகம்.!

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

பேரறிவாளனை விடுதலை செய் என்று திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துகளை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பேரறிவாளனை விடுவிக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.

7 பேர் சிறைதண்டனை :

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

7 தமிழர் விடுதலை முழக்கம்:

பல்வேறு அரசியல் கட்சினர் விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது#ReleasePerarivalanஎன்ற ஹேஷ்டேக் கீழ் திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துகளை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பேரறிவாளனை விடுவிக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி:

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளனை ஆளுநர் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வீடியோ வெளிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

unknown node

நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்:

தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது.

unknown node

நடிகர் விஜய் ஆண்டனி ட்வீட்:

நிரபராதியான சகோதிரர் பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும் தாமதிப்பது நீதியல்ல.

unknown node

நடிகர் ஆர்யா ட்வீட்:

நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள்.சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான்.

unknown node

இயக்குநர் பா.ரஞ்சித் ட்வீட்:

சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி.

unknown node

முதல்வருக்கு சமுத்திரக்கனி கோரிக்கை:

அறிவின் அப்பாவின் உடல் நலன் விசாரித்தேன். மிக கவலை அளிக்கிறது. மாண்புமிகு முதல்வரே மேதகு ஆளுநரை சந்தித்து அறிவு விடுதலை கோப்பில் உடனே கையெழுத்து பெற்றிடுக.

unknown node

“ஒருபோதும் குற்றம் செய்யாத ஒரு மனிதனுக்கு 30 ஆண்டுகள் சிறை;தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போராட்டம்” எங்கள் கோரிக்கை முதல்வர் மற்றும் ஆளுநர் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

unknown node

இயக்குநர் ராஜுமுருகன் ட்வீட்:

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் தாமதம் எதற்கு.? முதல்வரே… ஆளுநரே… அற்புதம் அம்மாளின் 30 வருட கண்ணீரை துடைத்து, பேரறிவாளன் என்ற, உடல் நலிவுற்றுக்கொண்டிருக்கும் நிரபராதி மகனுக்கான நீதியை விடுதலையை உடனே சாத்தியப்படுத்துங்கள்.

unknown node