தேர்தலால் ரஜினி படத்தின் படப்பிடிப்புகள் தாமதமாகிறதா

This cinima news gives information about Rajini's shooting of the film is delayed by the election-therthalal rajini padthin padapidipukal thamathamakiratha

இயக்குநர் ஏ .ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு செலவுகளுக்கான  பணத்தை கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் தேர்தல் முடிந்த பின் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினி கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “பேட்ட”. இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் இவர் இயக்குநர் ஏ .ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார். இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த்தின்  ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம்  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்து பண நடமாட்டங்கள் தடுக்கப்பட்டு  வருகின்றன.