விஜயகாந்த் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள்! ரஜினிகாந்த் பேச்சு!

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். அவருடைய உடல் சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே, நேரில் சென்று பல பிரபலங்களும் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக நேரில் சென்று ராதா ரவி, பார்த்திபன், லிவிங்ஸ்டன், எம்எஸ்பாஸ்கர், மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர், பாக்கியராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினார்கள். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது நேரில் சென்று விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்தார்.
விஜயகாந்துக்கு தற்போது வரை அஞ்சலி செலுத்தாத நடிகர் வடிவேலு.!
அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ” என்னுடைய அன்பு நண்பர் விஜயகாந்த் மறைவு எனக்கு மிகவும் வேதனை தருகிறது. விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். அவர் அடிக்கடி கோபப்படுவார். ஆனால், யாருக்கும் அவர் மேல கோபம் வராது. ஏனென்றால் விஜயகாந்த் கோபத்துக்கு பின்னால ஒரு நியாயமான காரணம் இருக்கும். சுயநலம் இருக்காது. ஒரு அன்பு இருக்கும்.
நான் சுயநினைவு இல்லாமல் இருந்தபோது அவர் பண்ண அந்த உதவி எல்லாம் நான் என்றுமே மறக்கவே மாட்டேன். அந்த அளவுக்கு அந்த சமயம் எனக்கு அவர் பல உதவிகளை செய்து இருக்கிறார். ஒரு முறை அவருடன் பழகினால் நட்புக்கு இலக்கணமாக கடைசிவரை திகழ்பவர் கேப்டன் விஜயகாந்த். கேப்டன் என்ற பெயர் அவருக்கு சரியான ஒரு பெயர். விஜயகாந்த்க்கு நிறைய நண்பர்கள் உள்ளனர், அவருடன் ஒருமுறை பழகிவிட்டால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதுவாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் நின்றவர் விஜயகாந்த். ஒரு முறை பழகினால் விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்” எனவும் ரஜினிகாந்த் கண்ணீருடன் பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025