நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் அரசியல் வருகையை அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.இதனிடையே அவர் ஒரு வருடத்திற்கு முன்பே அரசியலுக்கு வரப்போவது உறுதி என கூறிவிட்டார்.
unknown nodeதனது மக்கள் மன்றம் மூலமாக அரசியலுக்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றார். அதே வேளையில் தன் படத்திலும் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கு இடையில் அவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 500 பேர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்துள்ளனர்.
unknown nodeஇதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளாகிய எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக புகார் அளித்தார்.
unknown nodeமேலும் பேசிய அவர்கள் தமிழக மக்களுக்காக ஓய்வின்றி உழைக்கும் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பதால் அந்த கட்சியில் இணைந்துள்ளதாக கூறினார் மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் 25 ஆயிரம் பேர் திமுகவில் இணைய உள்ளதாக பேட்டியில் கூறினார்.