ராஜமௌலியின் அடுத்த பிரமாண்ட பிளான் .! சூப்பர் ஸ்டாரை வைத்து அட்வென்சர் படமாமே.!

It has been reported that Rajamouli is going to direct an adventure film with Mahesh Babu next.

ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து அட்வென்சர் படமொன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் எஸ்.எஸ்.ராஜமௌலி . தற்போது ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படத்தினை இயக்கியுள்ளார் .ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இதனை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் அடுத்த பிரமாண்ட படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது சமீபத்தில் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் அளித்த பேட்டியில், அடுத்ததாக ராஜமௌலி அட்வென்சர் படமொன்றை இயக்க உள்ளதாகவும்,அதில் மகேஷ் பாபு நடிக்க வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மிகப் பெரும் பொருட் செலவில் உருவாகும் இந்த படமானது ஆப்பிரிக்க காடுகள் பற்றி படம் பேசப்படும் என்றும் கூறியுள்ளார்.விரைவில் படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.