போட்ட பட்ஜெட்டை மொத்தமாக அள்ளிய ராயன்! தனுஷ் படைத்த மிரட்டல் சாதனை!

Raayan

ராயன் : நடிகரும், இயக்குனருமான தனுஷ் அவருடைய 50-வது படமான ராயன் படத்தினை இயக்கி அதில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  படத்தில் அவருடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி,  உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் 100 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருந்த காரணத்தால் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி, ராயன் திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 105 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் 100 கோடி தான். எனவே, அவ்வளவு கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த படம் வெளியான 5 நாட்களிலே பட்ஜெட்டை அள்ளி இருப்பதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும், தனுஷிற்கு 100 கோடி வசூல் கொடுத்த முதல் திரைப்படம் இது இல்லை. இதற்கு முன்னதாகவே, அவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த அசுரன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்கள் ஏற்கனவே 100 கோடி வசூலை தாண்டிவிட்டது. அந்த வரிசையில் ராயன் படமும் இணைந்துள்ளது. இதன் மூலம்,  ரஜினி, விஜய், அஜித் ஆகியோருக்கு பிறகு 4-வது 100 கோடி வசூல் படம் கொடுத்த நடிகர் என்ற சாதனையை பிறகு  சாதனை பட்டியலிலும் தனுஷ் இணைந்துள்ளார்.  மேலும், ராயன் படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை 5 நாட்களில் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்