நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘ராங்கி’. இந்த படத்தின் கதையை பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தான் எழுதியிருக்கிறார். படத்தை அவருடைய உதவி இயக்குனரான எம்.சரவணன் இயக்கியுள்ளார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார்.
unknown nodeRAANGI dec 30 [Image Source; Google]
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக இருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. பிறகு ஒரு வழியாக வரும் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலரில் வரும் ஒவ்வொரு ஆக்ஷ்ன் காட்சிகளும் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது.
unknown nodeRaangi – Theri Mass Trailer [Image Source; Google]
குறிப்பாக டிரைலரில் த்ரிஷா பேசும் பொம்பளைய கதற விட ஆம்பளையாக இருந்தால் மட்டும் போதாது என பேசும் டயலாக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டிரைலரை பார்த்த பலருக்கும் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு சற்று அதிகமாகி உள்ளது. எனவே, படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெறும் என தெரிகிறது. பொறுத்திருந்து படம் எங்கள் அளவிற்கு வரவேற்பு தெரிகிறது என்பதை பார்க்கலாம்.
unknown nodeமேலும் பொன்னின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் த்ரிஷாவின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்று கூறலாம். அந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடிக்கும் தளபதி 67 படத்திலும் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.