சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “தி லெஜன்ட்”. இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் என்ற படத்தை இயக்கிய ஜெரி & ஜெடி இயக்குகிறார்கள். படத்தை அருளே தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
unknown nodeபடத்தின் டிரைலர் வெளியாகி யூடுயூபில் பல மில்லியன்களை கடந்தது. மேலும் இந்த திரைப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeஇந்த நிலையில், படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், போபோ என்ற மூன்றாவது வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. வீடியோவில் நடிகையுடன் அண்ணாச்சி குத்தாட்டம் ஆடுவது போல கட்டப்பட்டுள்ளது.
unknown nodeஅசத்தலான இந்த பாடலை எழுத்தாளர் மதன் கார்க்கி எழுத, மறைந்த பாடகர் கே.கே , பாடகர் பிரசாத் எஸ் என், பாடகி ஜோனிதா காந்தி ஆகியோர் இணைந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியுள்ளார்கள். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node