இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்து ஜா நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
unknown nodeஇந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வரும் நோக்கில் படக்குழு திட்டமிட்டுள்ளனர். விரைவில் படத்தின் முதல் பாடலும் வெளியாகவுள்ளது.
unknown nodeநீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்- செல்வராகவன் கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. ஏனென்றால், இவர்களது கூட்டணியில் வெளியான துள்ளுவதோஇளமை , காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் இன்னும் வரை ரசிகர்களுக்கு மனதில் மறக்க முடியாத படமாக தான் இருக்கிறது.
unknown nodeஇந்த நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் எஸ். தாணு நானே வருவேன் படம் குறித்து பேசியுள்ளார் இது தொடர்பாக பேசிய அவர் “நானே வருவேன் திடைப்படம் செல்வராகவனை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும். இதற்கு முன் அவர் இயக்கிய படங்களை விட இந்த படம் ஒரு படி மேலே இருக்கும். இந்த படம் அகிலமெங்கும் அவரை பெரிய அதிர்வலையை உண்டாகும். தனுஷ் இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தி இருக்கிறார். இதுவரை யாரும் செய்திராத கதாபாத்திரமாக அவரின் கதாபாத்திரம் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.