ஜெயம் ரவிக்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்.!

ஜெயம் ரவியின் 28-வது படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

ஜெயம் ரவியின் 28-வது படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

நடிகர் ஜெயம்ரவி பூமி படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இயக்குனர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது தனது 28-வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை குலேபகவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார்.

ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கிறார். இன்று ஜெயம் ரவியின் பிறந்த நாளையொட்டி படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ளது.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் முன்னணி கதாயாகியாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர் தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம், பத்து தல, யானை, ருத்ரன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown nodeunknown node