விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இய்குனார் பேரரசு மீண்டும் விஜயை வைத்து படம் இயக்க ஆசைபடுகிறார். அதற்காக இரண்டு அருமையான கதைகளை தயார் செய்துவிட்டு விஜய்யை நேரில் சந்தித்து கதை சொன்னதாக பேரரசு சமீபத்திய ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
unknown nodeஇது தொடர்பாக பேசிய அவர் ” நான் விஜய் சாரை வைத்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு சூப்பரான கதைகளை எடுத்துக்கொண்டு அவரை சந்தித்தேன். கதையை கேட்டு முடித்த பிறகு விஜய் சார் என்னிடம் இப்போது இதுபோன்ற கதை வேண்டாம். மக்கள் ஆக்ஷன் படங்களை விரும்புகின்றனர்.
unknown nodeஇந்த கதை நல்ல தான் இருக்கு. பின்னர் பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டார். ஆனாலும். நான் மீண்டும் அவருக்கு பிடித்த படி ஒரு சூப்பரான கதையை தயார் செய்து மீண்டும் அவரைச் சந்தித்துக் கதை கூறுவேன்” என உறுதியாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆர்.ஜே. பாலாஜியும் நடிகர் விஜயிடம் கதை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeமேலும், நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.