மஞ்சும்மல் பாய்ஸ் மோகம் முடிந்ததா? அடுத்த தமிழில் கலக்க வரும் 'பிரேமலு' திரைப்படம்!

Premalu: தமிழகத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். குணா குகையை மயமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் அமோக வரவேற்பை

Premalu

Premalu: தமிழகத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். குணா குகையை மயமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. அதுபோல், வசூலில் ரூ.150 கோடியை கடந்து சாதனை படைத்தது.

READ MORE –2K கிட்ஸ் கொண்டாடும் காதல் மூவி…பிரேமலு தமிழ் ட்ரைலர் வெளியீடு.!

அந்த வகையில், கடந்த பிப்ரவரி 9-ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘பிரேமலு’ நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

READ MORE –அடுத்த ரூ.100 கோடி…மொழியைக் கடந்து கொண்டாடும் மல்லு திரைப்படம்.!

தற்பொழுது, மஞ்சும்மல் பாய்ஸ் தமிழகத்தில் எத்தனை திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என தெரியவில்லை. அதற்குள், மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு எவ்வாறு வரவேற்பு கிடைத்ததோ அதுபோல், பிரேமலு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றிய நிலையில், டப்பிங் பணிகள் முடிந்து நாளை மறுநாள்  (மார்ச் 15ம் தேதி) திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் டிரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

unknown node

READ MORE –இளைஞர்களை கொண்டாட வைத்த ‘பிரேமலு’! ஓடிடிக்கு எப்போது வருகிறது தெரியுமா?

பிரேமலு

இயக்குனர் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லென் கே.கபூர், மேத்யூ தாமஸ், ஷியாம் மோகன், மமிதா பைஜு, சியாம் புஷ்கரன் ஆகியோர் நடித்த மலையாளப் படம் தான் பிரேமலு. இந்தப் படத்தை பாவனா ஸ்டுடியோஸ் மற்றும் ஃபகத் பாசில் அண்ட் பிரண்ட்ஸ் ஆகிய பேனர்கள் தயாரித்துள்ளன. அவர்களை தவிர, சங்கீதா பிரதாப், அல்தாஃப் சலீம், ஷியாம் மோகன் எம், அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன் மற்றும் ஷமீர் கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.