அர்ஜுனுக்கு எதிராக களத்தில் இறங்கிய பிரகாஷ் ராஜ் #ME TOO

உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பெரிய திருப்பத்தை திரையுலகில் ஏற்படுத்திய இயக்கம் மீடூ #Me_too புயல் தற்போது இந்தியாவில் புயலை

உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பெரிய திருப்பத்தை திரையுலகில் ஏற்படுத்திய இயக்கம் மீடூ #Me_too புயல் தற்போது இந்தியாவில் புயலை கிளப்பி வருகிறது.இந்த விவகாரத்தை பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை முன் வைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு பல்வேறு துறைகளில் தங்களுக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை தைரியமாக எடுத்து கூறிவருகின்றனர்.அதில் தற்போது சிக்கியுள்ளவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இவர் நிபுணன் எனும் படத்தில் நடித்த போது உடன் நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்பவரை  படப்பிடிப்பின் போது இறுக்கி அணைத்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை குறிப்பிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அர்ஜுன் இதனை மறுத்தாலும் அவர் பெருந்தன்மையோடு மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டார்.

DINASUVADU

unknown node