தனுஷுடன் இணைந்த பிரகாஷ் ராஜ்.! மிரட்டும் D44 கூட்டணி.!

தனுஷின் 44- வது படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் 44- வது படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “மாறன்”. இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷின் 44 வது படத்தை யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்குகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பதாகவும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குனர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், தற்போது D44 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்து வருகிறது. முதல் அறிவிப்பாக இயக்குனர் பாரதி ராஜா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் தனுஷுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் திருவிளையாடல் ஆரம்பம், வேங்கை, அசுரன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது நான்காவது முறையாக தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node