மிகப்பெரிய சாதனை படைத்த சூர்யாவின் சூரரைப்போற்று..!

Yes, the only movie that has been seen more on Amazon Frame so far is Surya's Surarai

ஆம்  இதுவரை அமேசான் பிரேமில் அதிகமாக பார்க்கப்பட்ட ஒரே திரைப்படம் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் தான்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படம் கடந்த ஆண்டே திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படத்தை ஒடிடி இணையத்தளத்தில் வெளியிட்டினர். மேலும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத் திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் சிறப்பான விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 100 நாட்கள் கடந்துள்ளதால் சூர்யா ரசிகர்கள் ட்வீட்டரில் ஹாஸ்டெக் செய்து கொண்டாடி தீர்த்தனர். அதனை தொடர்ந்து தற்போது இந்த சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஆம் அமேசான் பிரேமில் இதுவரை அதிகமாக பாக்கப்பட்ட ஒரே திரைப்படம் இதுதானாம். இந்த மிகப்பெரிய சாதனையை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.