ரைட்டு…பிக் பாஸ் வீட்டில் முதல் சண்டை! வாயை கொடுத்த பிரதீப்…கடுப்பான விசித்ரா!
பிக் பாஸ் சீசன் 7 சற்று வித்தியாசமாக இரண்டு வீடுகளை கொண்ட நிகழ்வாக சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. முதல் நாளில் இந்த வார வீட்டின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
6 போட்டியாளர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளார் பிக் பாஸ். அதாவது, ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவே கூடாது என்றும், பிக் பாஸில் கொடுக்கப்படும் எந்த டாஸ்க்கிலும் கலந்து கொள்ள முடியாது.
மேலும், அவர்கள் ஷாப்பிங் செய்ய முடியாது, மூன்று வேலைக்கான உணவை பிக் பாஸ் ஹவுஸ் மெட்ஸ் முடிவு செய்ய, அதை மட்டும் தான் சமைத்து சாப்பிட வேண்டும். இப்படி இருக்கையில், இந்த சமையல் அறையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
அதாவது, இரண்டாம் நாளான இன்று சண்டை தொடங்கிவிட்டது போல் தெரிகிறது. அட ஆமாங்க…பிரதீப் மற்றும் விசித்ரா இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அது என்னெவென்றால், இன்றைய நிகழ்வுக்கான முதல் ப்ரோமோவில், ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் தான் சமைக்க வேண்டியது என்பது ரூல்.
இந்நிலையில், விசித்ரா மற்றும் யுகேந்திரன் அந்த ரூலை மீறி ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களுக்கு சமையல் செய்ய உதவி செய்துள்ளனர். இதனால், இந்த இரண்டு நபர்களையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு விசித்ரா – யுகேந்திரன் செல்ல வேண்டுமென பிக் பாஸ் உத்தரவிடுகிறார்.
அதற்கு உடனே, தனது வாயை வைத்து கொண்டு சும்மா இருக்காமல் பிரதீப் அந்தோணி இங்க இருந்து 2 பேர் அங்க போன, அங்க இருந்து நாமினேட் ஆகாத 2 பேரை இங்க அனுப்புங்க பிக் பாஸ் என்று கூற, இதை கேட்டு கடுப்பான விசித்ரா அங்க இருந்து எதுக்கு இங்க 2 பேர் வேணும் என்று கோபடத்துடன் கேட்கிறார்.
அதற்கு, பிரதீப் அந்தோணி நீங்க இங்க இருந்து போனால் கடன் அடைக்க 2 பேர் இங்க வேணும் என்கிறார். அதற்கு மிகவும் கோபமடைந்த விசித்ரா எங்க இரண்டு பேருக்கும் சமமாக இருக்காங்களா இங்க வருவதற்கு என்று கேள்வி எழுப்ப வாயை மூடினார் பிரதீப். முதல் நாள் சுமுகமாக சென்ற பிக் பாஸ் வீடு இரண்டாம் நாள் விதி மீறல்களும் சண்டை கலமாக மாறியிருக்கிறது. என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.