பிரபாஸின் 20வது படமான ராதேஷ்யம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரமாண்ட திரைப்படமான பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். தென்னிந்தியா சினிமாயுலகை திரும்பி பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி. கடந்த2017ம் ஆண்டு பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி2500கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ் அவர்களின் 20வது படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஊரடங்கிற்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
‘ராதே ஷ்யாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் இந்தப் படத்தினை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் டி. சீரிஸ் இணைந்து தயாரிக்கிறது. மேலும் சச்சின் கெடேகர், பாக்ய ஸ்ரீ, பிரியதர்ஷி, சாஷா சேத்ரி, சத்யன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. தற்போது அந்த போஸ்ட்ரை சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown node