பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் சிம்புவுக்கு தங்கையாகிறாரா பிரபல நடிகை?

பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் நடிகை நந்திதா ஸ்வேதா சிம்புவுக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் நடிகை நந்திதா ஸ்வேதா சிம்புவுக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. தற்பொழுதும் அமல்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் ஒன்றாக சினிமா துறையினர் தங்களது தொழிலை தொடங்குவதற்கு தற்போது அரசு அனுமதித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் டி ஆர் அவர்களின் மகன் சிம்பு அவர்கள் நடிப்பில் வெளியாகி கடந்த வருடம் வெற்றி பெற்ற வந்தா ராஜாவா தான் வருவேன் படத்துக்குப் பிறகு மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

கொரோன ஊரடங்கு காரணமாக தடைப்பட்டுவந்த இந்த படம் வருகிற நவம்பர் மாதம் மீண்டும் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படம் துவங்குவதற்கு முன் இருக்கக்கூடிய இந்த ஒரு மாத இடைவெளியில் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் சிம்பு ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஷூட்டிங்கும் திண்டுக்கல்லில் வைத்து மிக ஆர்வமாக நடைபெற்று வருகிறது. இதன் மோஷன் போஸ்டர் வருகிற 26-ஆம் தேதி மதியம் வெளியிடப்படும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதிஅகர்வால் அவர்கள் நடிக்கிறார்கள். தமிழ் திரையுலகில் அதிக படங்களில் ஹீரோயினாக காட்சி கொடுத்த நந்திதா ஸ்வேதா அவர்கள் இந்தப் படத்தில் சிம்புவுக்கு தங்கையாக நடிக்கிறார் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் இவ்வாறு இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாரோ என்பது போன்ற சில பேச்சுகளும் தமிழ் திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.