நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை!

Default Image

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவரது நடிப்பில் வெளியாகியுள்ள பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளது.

இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக, நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார்.

இதனையடுத்து, நடிகை வித்யாபாலன் இதுகுறித்து கூறுகையில், நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் சந்தோஷப்பட்டாராம். படத்தில் நடிகர் அஜித்தின் ஆளுமை திறன் தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே தனக்கு பின்னால் வைத்திருக்கும் ஒருவர் என் பக்கத்தில் நிற்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் நேர்கொண்ட பார்வை படம், பெண்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்யக்கூடாது எனபதை வலியுறுத்தும் அழுத்தமான கதையம்சத்தை கொண்டதாக உருவாகி உள்ளதாக கூறியுள்ளார். தலயின் இமேஜை பற்றி அவரிடம் சொன்னதும் கூச்சப்பட்டதாகவும் வித்யாபாலன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்