2020-பொங்கல் தர்பார் பொங்கல்.! 2021-அண்ணாத்த பொங்கல்.!

வருகின்ற பொங்கல் அன்று ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருகின்ற பொங்கல் அன்று ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கிராமத்து பின்னணியில், விவசாய கதையம்சங்களை கொண்டு உருவாகி வருகிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டுக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை கொல்கத்தா, புனே போன்ற வடமாநிலங்களில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இப்படம் அடுத்த வருடம் தை பொங்கல் அன்று வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

unknown node