சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென்று இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.விரைவில் அரசியலில் காலடி எடுத்து வைக்கவுள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதை வடிவில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வாழ்த்து மடலில் “கலை உலகில்என் அணுக்கமான நண்பர்கள் சிலருள்நெருக்கமான ஒருவர் ரஜினிகாந்த்.எழுபதைத் தொடுகிறார்.
எழுபது என்பது முதுமையின் இளமைஅல்லது இளமையின் பெருமை.உடல் நலத்தோடும்,மன வளத்தோடும் பல்லாண்டு வாழத் தொலைபேசியில் வாழ்த்தினேன்.மகிழ்ச்சி; எனக்கும் அவருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
unknown node