விஷாலிற்கு வில்லியாக நடித்தது எனக்கு கிடைத்த மிகபெரிய வாய்ப்பு..!

Actress Regina Cassandra, who played the villain in Chakra, has said that acting as a villain is the biggest opportunity I have ever had.

சக்ரா படத்தில் வில்லியாக நடித்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா விஷால் போன்ற நடிகர்களுக்கு வில்லியாக நடிப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்று கூறியுள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சக்ரா. இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷாலிற்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர், மனோபாலன், ரெஜினா கசாண்ட்ரா, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதுவரை மொத்தமாக இந்த படம் ரூ. 14.07 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள ரெஜினா கசாண்ட்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ” எனக்கு இது போல எதிர்மறை கதாபாத்திரங்கள் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குனர்கள் என்னால் இதனை சிறப்பாக செய்ய முடியும் என நம்புகிறார்கள். தெலுங்கில் வெளியான பெயர் திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன் இந்த கதாபாத்திரம் எனக்கு சரியாக பொருந்தும் என்று விஷால் தெரிவித்தார். படக்குழுவினர் அனைவருமே இந்த பாத்திரத்தை என்னால் கச்சிதமாகச் செய்ய முடியும் என நம்பினர். அதுவே எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்தது. விஷால் போன்ற நடிகர்களுக்கு வில்லியாக நடிப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும் கூறியுள்ளார்.