துல்கருக்கு நடிகையாகும் துறுதுறு தமிழ் நடிகை...!

தமிழ் சீரியலில் இருந்து சினிமாவில் நடிகை ஆனவர்கள் மிக குறைவு என்றாலும் அதில் நடிகையாக தற்போது வலம் வரும் ப்ரியா பவானி ஷங்கரும் ஒருவர். தமிழில் கல்யாணம் முதல்

தமிழ் சீரியலில் இருந்து சினிமாவில் நடிகை ஆனவர்கள் மிக குறைவு என்றாலும் அதில் நடிகையாக தற்போது வலம் வரும் ப்ரியா பவானி ஷங்கரும் ஒருவர். தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் இவரது சினிமா ஆரம்பமான பயணம் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிக்கும் வரை தற்போதைக்கு வளர்ந்துள்ளது.

மேலும் இவருடைய நடிப்பில் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், என்ற படத்திலும் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம்  போன்ற படங்கள் இவருடைய நடிப்பில் வெளிவர உள்ளது. இந்நிலையில் தன்னுடைய சினிமா பயணத்தில் அடுத்ததாக மலையாளத்தின் பிரபல நடிகர் துல்கர் சல்மானின் ஜோடியாக ஒரு படத்தில்  கமிட் ஆகியுள்ளாராம். இந்த படத்தை ரா.கார்த்திக் என்பவர் இயக்குகிறார் மேலும் படத்திற்கு வான் என்று பெயர் வைத்துள்ளனர்.