விடாமுயற்சி படத்திலிருந்து வந்த முதல் அதிகாரப்பூர்வ அப்டேட்!

விடாமுயற்சி படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகுமா என அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி

vidamuyarchi movie

விடாமுயற்சி படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகுமா என அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுவரை இந்த படம் பற்றிய அப்டேட்டுகள் தகவல்களாக மட்டுமே வெளியாகி வந்தது. ஏனென்றால், படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் படத்தின் பெயர் பற்றியே அப்டேட் மட்டுமே கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது.

அந்த அறிவிப்பை தொடர்ந்து விடாமுயற்சி படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக  வெளியாகவில்லை. தகவல்களாக படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி  ரசிகர்களுக்கு தெரிய வந்தது. அதன்பிறகு அஜித் விடாமுயற்சி படத்தில் நடிக்கும் அர்ஜுன், த்ரிஷா , ரெஜினா, ஆகியோரை புகைப்படங்களை எடுத்திருந்தார்.

சங்கி என்றால் கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா சொல்லவில்லை- ரஜினிகாந்த் விளக்கம்!

அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.  இந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பை குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அதிகாரப்பூர்வமாக அப்டேட் ஒன்று கொடுத்துள்ளார். அதன்படி விடாமுயற்சி  படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் எடுக்கப்படவேண்டிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு மட்டும் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அதைப்போல, இந்த படப்பிடிப்பை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி படக்குழு  வேறு இடத்திற்கு செல்லவுள்ளதாகவும் அஜித்தின் புகைப்படங்களை வெளியிட்டு சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார். எப்போது விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த அப்டேட் அவர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

மேலும், விடாமுயற்சி படத்தினை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் அஜித்க்குமாருடன் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node