தீபாவளிக்கு புது படங்கள் ரீலீஸ் இல்லை- தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா.!

தீபாவளிக்கு புது படங்கள் ரீலீஸ் செய்யப்பட மாட்டாது என்று இயக்குனரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு புது படங்கள் ரீலீஸ் செய்யப்பட மாட்டாது என்று இயக்குனரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது . அதனையடுத்து சமீபத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி 50% இருக்கைகளுடன் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது . அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் படத்தின் வசூலில் 50% -ஐ அளித்தால் விபிஎப் கட்டணத்தை கைவிடுவதாக அறிவித்தனர் .

இந்த விபிஎப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்த தொடர்ந்து நடந்து வந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்ளவில்லை என்றும், எனவே விபிஎப் கட்டணம் குறித்து முடிவு வரும் வரை புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்றும் , எனவே அனைத்து தயாரிப்பாளர்களும் தங்களது புதிய படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும்படி இயக்குநரும்,  தயாரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா அறிக்கையை வெளியிட்டு தெரிவிதீதிருந்தார் .

அதனை தொடர்ந்தும் பலமுறை இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்ததாகவும், எனவே தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகாது என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார் .  எனவே தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த பிஸ்கோத், களத்தில் சந்திப்போம், எம்ஜிஆர் மகன் ஆகிய படங்கள் வெளியாகாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பபட்டுள்ளதும், பழைய மெகா ஹிட் படங்களை திரையிட உள்ளதாகவும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.