நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் அது போதாது – லோகேஷ் கனகராஜ்..!

Lokesh Kanagaraj has mentioned on his Twitter page "No matter how many times I say it, it is not enough Vijay Anna Vijay Sethupathi Anna".

லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் நான் எத்தனை முறை சொன்னாலும் அது போதாது நன்றி விஜய் & விஜய் சேதுபதி அண்ணா என்று குறிப்பிட்டுள்ளார்.

கோரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 % இருக்ககைகளுடன் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாட்களிலே மாஸ்டர் படம் நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல் திரையரங்குகள் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. இதனால் விஜய்யை வசூல் சர்க்கரவர்தி என்று கூறினார்கள். அதற்கு பிறகு வெளியான சில நாட்கள் கழித்து அமேசான் பிரேமிலும் வெளியானது.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகி வெற்றி கரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு“நான் எத்தனை முறை சொன்னாலும், அது போதாது நன்றி விஜய் அண்ணா விஜய் சேதுபதி அண்ணா”என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node