மாமாகுட்டி & ரெவியுடன் ரஞ்சிதமே பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நிகிதா....வைரலாகும் வீடியோ.!

லவ் டுடே படத்தில் நடித்த நிகிதா, ரெவி, மாமாகுட்டி போன்ற அணைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது என்றே கூறலாம். படம் வெளியாகி பல நாட்கள்

லவ் டுடே படத்தில் நடித்த நிகிதா, ரெவி, மாமாகுட்டி போன்ற அணைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது என்றே கூறலாம். படம் வெளியாகி பல நாட்கள் கடந்தும் இன்னும் வெற்றிகரமாக சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

தமிழில் இதன் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அங்கேயும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.

இதையும் படியுங்களேன்-எங்களுக்கு இன்னும் வயசு ஆகல… கல்யாணதுக்கு அடம்பிடிக்கும் டாப் நடிகைகள்.?

இதனால், படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவரும் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக செல்வது ஊடகங்களுக்கு பெட்டிக்கொடுப்பது என பிசியாக இருக்கிறார்கள். அந்த வகையில். தற்போது நிகிதா, ரெவி, மாமாகுட்டி  நடித்த பிரபலங்கள் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமின்றி, வாரிசு படத்திலிருந்து வெளியான ரஞ்சிதமே பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node