நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “துணிவு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.
unknown nodeThunivu Dubbing work Completed Ajith [Image Source: Twitter]
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. நேற்று படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முடித்துக்கொடுத்தார். அதற்கான புகைப்படமும் நேற்று இணையத்தில் வைரலானது.
unknown nodeThunivu First Single ChillaChilla [Image Source: Twitter]
இதனை தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தற்போது துணிவு முதல் பாடல் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி, சில்லா சில்லா என தொடங்கும் அந்த பாடலை அனிருத் படியுள்ளதாகவும், பாடலை வைசாக் எழுதியுள்ளதாகவும் விரைவில் அந்த பாடல் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.
unknown nodeThunivu First Single Singing Anirudh [Image Source: Twitter]
ஏற்கனவே, அஜித்திற்கு ‘ஆலுமா டோலுமா’ எனும் மிகப்பெரிய ஹிட் பாடலை கொடுத்த அனிருத் மீண்டும் அஜித்துக்காக துணிவு படத்தில் பாடல் படியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். மேலும் அஜித்தின் 62-வது படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node